வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய திரைப்படத் துறையில் பல்வேறு வேடங்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்குப் பிறகும், அவர் தொடர்ந்து திரைப்படத் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்போது, அவர் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘சரஸ்வதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலட்சுமி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் ஆகியோர் இணைந்து ‘தோஷா டைரீஸ்’ என்ற நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். வரலட்சுமி இதில் முக்கிய வேடத்தில் நடித்து இயக்குவார்.

அவருடன் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவாளராகவும், தமன் இசையமைப்பாளராகவும் இருப்பார்கள். வரலட்சுமியின் இயக்குநராக அறிமுகமானதற்கு பல்வேறு திரைப்பட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.