சென்னை: கொலை மற்றும் கொலை தொடர்பான விசாரணைக் கதையாக ‘தி வெர்டிக்ட்’ திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இதை கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். அக்னி என்டர்டெயின்மென்ட் சார்பாக பிரகாஷ் மோகன் தாஸ் இதைத் தயாரிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா, எடிட்டர் சதீஷ் சூர்யா. படத்தின் இரண்டாவது தனிப்பாடலான ‘திருடா’வை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் வெளியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இரண்டாவது தனிப்பாடலின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.