சென்னை : GOAT படத்திற்காக வெங்கட் பிரபு 17-வது எடிசன் விருது நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநர் விருதை வென்றுள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிம்ரன், குஷ்பூ, மடோனா செபாஸ்டியன், ரெடின் கிங்ஸ்லி என பலர் கலந்து கொண்டனர்.
விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா என பலர் நடித்த படம் கடந்த ஆண்டு வெளிவந்து ரூ.400 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது. இந்த படத்தைக்காக சிறந்த இயக்குனர் விருதை வெங்கட் பிரபு வென்றுள்ளார்.
இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.