சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 6ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.