விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால், அது பொங்கல் ரேசிலிருந்து விலகியது. இருப்பினும், அஜித் ரசிகர்கள் கார் ரேஸில் அவர் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், லைக்கா நிறுவனம் இன்று விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதாக அறிவித்தது, அதை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இன்று, ரிலீசுடன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. ட்ரெய்லர் முழுவதும், அஜித் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். திரிஷாவுடன் ரொமான்ஸ், லவ் காட்சிகளுடன், வில்லன்களை அவர் எதிர்த்து போராடும் காட்சிகளும் மிகவும் சிறந்த முறையில் இருக்கின்றன.
இந்த படத்தின் ரிலீசுக்கு ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய வரவேற்பாக இருக்குமென்று சொல்லலாம். இதன் மூலம், விடாமுயற்சி படம் பீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிரூட்டி, தியேட்டர்களில் ஒரு புதிய அலப்பறையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.