சென்னை: நடிகர் அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி படத்தை பார்த்துவிட்டு ரசிகர் பேசியது செம வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சென்னையில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் உணர்ச்சிவசமாக பேட்டியளித்துள்ளார்.
அதில் “அனைவரும் தங்களது மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதை தான் இந்த படம் தெரிவிக்கிறது” என கூறியுள்ளார். மேலும், “கோச்சிகிட்டு போன என் பொண்டாட்டியை தேடி போகிறேன்” என அந்த ரசிகர் பேசிய காணொளி தற்போது வைரலாகியுள்ளது.
இத்திரைப்படத்தை பார்த்த இயக்குநர் வெங்கட் பிரபு, “”விடாமுயற்சி’ படத்தின் பாணிக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது. ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும்தான். சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்” என படக்குழுவை பாராட்டியுள்ளார்.