சென்னை : இயக்குனரும் நடிகருமான பிரதிப ரங்கநாதன் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டிராகன் படத்தின் 25 வது நாளில் ரசிகர்கள் பாராட்டி பேசும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
லவ் டுடே படத்தின் மூலம் நடிகராக கவனம் பெற்ற பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டை எகிறச் செய்துள்ளது டிராகன் படம். ரூ.150 கோடியை தாண்டி இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 21ஆம் தேதி டிராகன் படம் வெளியான நிலையில், இன்று 25ம் நாளையொட்டி தயாரிப்பு நிறுவனம் புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதில், படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
டிராகன் படத்தின் வசூல் இன்னும் ஓயவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதிபரங்க நாதனுக்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.