தன்னம்பிக்கையோடு தன்னை வெளிப்படுத்தும் நடிப்பும் எண்ணங்களும், வித்யா பாலனுக்கு தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளன. தனது உடல் எடையைக் குறித்த விமர்சனங்களையும், அவற்றை மீறி தன்னை ஏற்றுக்கொண்ட விதத்தையும் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். “நான் நான் தான்” என வெளிப்படையாக சொல்வதற்கும், ஆன்மீக தன்னம்பிக்கையுடன் தன்னை நிலைநாட்டுவதற்கும் அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பெண்களுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது.
தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அளித்த பேட்டியில், “உண்மையில் என் மீது தவறு எதுவும் இல்லை” என்ற அவரது கூற்று, சமூக அழுத்தங்களை எதிர்த்து தன்னை நிலைநிறுத்தும் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக உடல் எடைக்காக விமர்சனங்களுக்கு உள்ளாகிய வித்யா பாலன், அவை தன்னை குற்ற உணர்ச்சியடைய ஏற்படுத்தி விடக்கூடாது. அதற்குப் பதிலாக, அந்த மனநிலையே அவரை சிறந்த பங்களிப்பாளராக மாற்றி, தொடர்ந்து முன்னணி நடிகையாக வைத்துள்ளது.

பூல் புலாய்யா திரைப்பட விளம்பரத்தின் போது, உடல் எடை குறைப்பதற்கான தன்னுடைய சிக்கலான முயற்சிகளை அவர் பகிர்ந்துள்ளார். தீவிர டயட் முறைகள், உடற்பயிற்சிகள், மற்றும் மீண்டும் எடை திரும்பும் போராட்டங்களை அவரும் சந்தித்துள்ளார். ஆனால், சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையில் தனது உணவுப் பழக்கங்களில் மாற்றம் செய்ததற்குப் பிறகு, உடல் எடையில் விரைவான மாற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார்.
சில சைவ உணவுகளும் கூட தனது உடலுக்கு பொருந்தவில்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்திய வித்யா பாலன், “ஒவ்வொரு உணவும் எல்லோருக்கும் வேலை செய்யாது. நம் உடலுக்கு எது சரி என்பதை நிபுணர்களால் கண்டறிய வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார். இந்த உண்மையை புரிந்துகொண்டு செயல்பட்டதால்தான் இன்று அவர் தனது வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றிகரமாக இருக்கிறாரென்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார். வித்யா பாலனின் பயணம், ஒவ்வொரு பெணுக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு கல்வியாகும்.