விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் விஜய் முழுநேர அரசியலில் நுழைந்துள்ளதால் இதுவே அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்நிலையில், விஜய்யின் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் ஒரு நேர்காணலில், “ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நான் நடித்துள்ளேன். விஜய் மிகப்பெரிய நட்சத்திரம்.

ஒரு நாள், படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று படக்குழுவினரிடம் கேட்டேன். செட் தான் ஒரே வழி என்றார்கள். தெருவில் படப்பிடிப்பு நடத்தினால், அவரைப் பார்க்க நிறைய பேர் கூடுவார்கள்; நாங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாது என்றார்கள்.
அந்த அளவுக்கு விஜய் கொண்டாடப்படுகிறார். இதற்கு முன்பு, நான் சூர்யாவுடன் ‘கங்குவா’ படத்தில் நடித்தேன். அவரும் ஒரு சிறந்த நடிகர். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்தேன். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.”