கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘காதலிக்க நேரமில்லை’. படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஏ.ஆர் ரஹ்மான் உடன் வெளியான பாடல்கள். இசை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், ‘காதலிக்க நேரமில்லை’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் தாமதமாகி வருகிறது. தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிருத்திகா உதயநிதி – விஜய் சேதுபதி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதன் தயாரிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இறுதி செய்யப்படவில்லை.