பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
சத்யஜோதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், செம்பியன் வினோத், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக தொடங்க உள்ளது. என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டதால் விஜய் சேதுபதி யாருடைய படத்திற்கு அடுத்ததாக தேதி கொடுப்பார் என்பது விரைவில் தெரியவரும்.