சிம்பு (எஸ்டிஆர்)–வெற்றிமாறன் கூட்டணி பற்றிய செய்தி வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடசென்னை பாணியில் ஒரு கேங்ஸ்டர் கதையில் சிம்புவை இயக்கப்போகிறார் என்ற தகவல்களும் வலுவாக பரவின.

முதலில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் படம் துவங்கப்படவிருந்தாலும், சிம்புவின் சம்பள பிரச்சனையால் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வெற்றிமாறனின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சிம்பு மீண்டும் தாணு தயாரிப்பில் இந்த படத்தை செய்ய சம்மதித்துள்ளார். இதனால் STR 49 விரைவில் துவங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் ஸ்டைலில் பக்கா கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இப்படத்தில் சிம்பு இரண்டு விதமான தோற்றங்களில் காட்சியளிக்கிறார். அதற்காக அவர் தனது நீண்ட முடியை வெட்டி, மிரட்டலான புதிய லுக்கிற்கு மாறியுள்ளார்.
வடசென்னை படத்தில் நடித்த அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த புதிய சிம்பு படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பட அறிவிப்புக்காகவே வெற்றிமாறன் ஒரு மிரட்டலான ப்ரொமோ வீடியோ தயாரித்து விட்டதாகவும், அதில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ப்ரொமோ தான் ரசிகர்களுக்கு முதல் பரிசாக வரவிருக்கிறது.