சென்னை: விமல், சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ். சிவாஜி, ஜி.எம். குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பவானி, ஷிவின், குயின்சி நடித்துள்ள படம், ‘ஓம் காளி ஜெய் காளி’. ராமு செல்லப்பா மற்றும் குமரவேல் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்க, மணி அமுதவன் பாடல்களை எழுதியுள்ளார். பழிவாங்கல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் காளியின் சக்தி வாய்ந்த அவதாரத்தில் நடித்துள்ளார்.
அநீதிக்கும் நீதிக்கும் இடையேயான இந்தப் பயணத்தில், அவரது காளி அவதாரம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவின் போது படப்பிடிப்பு நடந்தது. ராமு செல்லப்பா வசனம் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி ஆகிய ஏழு மொழிகளில் இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.