தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால், தனது திரைபயணத்தை இயக்குனர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக துவங்கினார். 2004-ல் வெளியான செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் சண்டைக்கோழி படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தந்தது. தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற படங்கள் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.

விஷால் நடிப்பில் சில படங்கள் தோல்வி கண்ட பின்னர், பாண்டியநாடு திரைப்படத்தை தானே தயாரித்து வெற்றியைப் பெற்றார். அதன் பிறகு துப்பறிவாளன், இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் மதகஜராஜா படத்துடன் திரும்பிய அவர், தற்போது புதிய படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற ‘யோகி டா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சாய் தன்ஷிகா, யோகி டா படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
விழாவில் பேசிய இயக்குனர் உதயகுமார், விஷால் மற்றும் சாய் தன்ஷிகா காதலிப்பதாக செய்திகள் வந்ததைக் குறிப்பிட்டார். இதற்கு விஷால் வெட்கப்பட்டு சிரித்தது அனைவரையும் கவர்ந்தது. இது இருவரும் காதலிக்கின்றனர் என்ற ஊகங்களை உறுதி செய்தது.இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர் என்ற தகவலும் தற்போது பரவி வருகிறது.
ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாய் தன்ஷிகாவுடன் விஷாலின் வாழ்க்கை புதிய கட்டத்தை அடையவுள்ளதாகத் தெரிகிறது.இச்செய்தி தமிழ் திரையுலகில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.