தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் இன்டர்நேஷனல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கவுள்ள படங்களை குறித்த அறிவிப்பை நாளை காலை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளது. இந்த அறிவிப்புக்கான ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியீடு ஏற்பாடாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதிக கவனத்தை ஈர்த்திருப்பது, அஜித் குமார் நடிக்கும் AK64 திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு தான். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளராக ஐசரி கணேஷும் இதில் இணைவது உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது அஜித் மற்றும் வேல்ஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால், ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதோடு மட்டுமல்லாமல், மற்றொரு முக்கியமான தகவல் என்னவெனில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் ஒரு புதிய படம், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், யோகி பாபுவுடன் ரவி மோகன் இயக்கும் படம், சுந்தர் சி இயக்கும் முக்குத்தி அம்மன் 2, மற்றும் ஜீனி போன்ற படங்களும் அந்த பட்டியலில் இடம் பெறவுள்ளதாக தெரிகிறது.
AK64 குறித்த அறிவிப்பு நாளையே வருமா அல்லது தனியாக ஒரு வீடியோவாகவே வருமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது. ஏனெனில் இது வேல்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சியாக இருக்கப்போகும் என்பது உறுதி.