ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள War 2 படத்தின் டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்தின் கூலி படத்துடன் போட்டியாக திரைக்கு வரவுள்ள இந்த படம் பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விமானத்தில் நடைபெறும் சண்டைக் காட்சிகளில் ஹ்ரித்திக் மற்றும் என்டிஆர் மாஸ் காட்டினாலும், அந்த காட்சிகள் சிஜி என்பது தெளிவாக தெரிகிறது.

முந்தைய பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், இருவருமே ஹீரோக்களா? அல்லது யாராவது வில்லனா? என்பது குறித்த குழப்பம் டிரைலர் முழுவதும் பதிலில்லாத கேள்வியாகவே உள்ளது. ஜூனியர் என்டிஆர் பாகிஸ்தானுக்காக சண்டையிடுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிரைலரில் இந்தியா ஃபர்ஸ்ட் என இருவரும் சொல்லும் பகுதி, இருவரும் இந்திய வீரர்களாகவே இருக்கலாம் என்பதையும், ஒரு பெரிய ட்விஸ்ட் இருப்பதாகவும் எண்ணச் செய்கிறது.
கியாரா அத்வானியின் கவர்ச்சி காட்சிகள் டிரைலரில் முக்கியமாக வைக்கப்பட்டுள்ளன. திருமணத்துக்குப் பிறகும் பிகினி மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க தாராளம் காட்டியுள்ளார். சிலர் இது நடிகைகளின் தனி விருப்பமே என்றாலும், சிலர் திருமணமான நடிகைகள் இப்படி நடிப்பதால் தான் ஹீரோக்கள் அவர்களை விரும்புகிறார்கள் எனவும் விமர்சனம் செய்கிறார்கள். War 2 திரைப்படம், ஹ்ரித்திக் ரோஷனுக்கு வார் மற்றும் ஃபைட்டர் ஆகிய படங்களுக்குப் பிறகு இன்னும் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் வெளியீடு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கூலி படத்துக்கு நேரடியாக போட்டியாக அமைகிறது. பாலிவுட் மற்றும் தெலுங்கு பாக்ஸ்ஆபீஸில் War 2 அதிக வசூலை சம்பாதிக்கும் என்பதே எதிர்பார்ப்பு. கூலி படத்தில் லோகேஷ் என்ன செய்திருப்பார் என்பதற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.