‘பன் பட்டர் ஜாம்’ என்பது ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரித்த படம். இந்த படத்தை ‘காலங்கள் அவள் வசந்தம்’ படத்தின் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, மற்றும் விஜய் பப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம், வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ராலேயில் சிறப்புத் திரையிடலாகத் திரையிடப்பட்டது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5,000 தமிழர்கள் படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.
சுரேஷ் சுப்பிரமணியன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA) என்பது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற கூட்டமைப்பாகும்.