சென்னை: ரம்பாவின் கணவர் ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி, அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கின்றது என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 90 காலம் என்பது பொன்னானது என்றே கூறலாம். அப்போதைய காலக்கட்டத்தில் ரம்பாவின் வெற்றிப் பயணம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஸ்பூரி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.
பின் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வந்த ரம்பா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் ராபர் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
இதில், ரம்பா, தயாரிப்பாளர் தாணு என பலர் கலந்துகொண்டனர். தாணு அந்நிகழ்ச்சியில் பேசும்போது, அதில் நடிகை ரம்பா குறித்து பெருமையாக பேசிய தாணு, ரம்பாவின் கணவர் ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி, அவங்க இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கும்போது கண்கள் பனிக்கின்றது என பேசியுள்ளார்