சென்னை : கிரைம் திரில்லர் படமான ‘ராட்சசன்’ ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் ராம்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து ராம்குமார் புதிய படம் இயக்குவதாக இருந்தது. இதற்காக 2 ஆண்டுகள் அவர் காத்திருந்த நிலையில், தனுஷ் திடீரென நடிக்க மறுத்தார்.
அதையடுத்து சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷாலிடம் அந்த கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் ராம்குமாரின் புதிய படம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.