சென்னை: 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்த நதியா, தற்போது படங்களில் நடிப்பதில்லை என்றாலும், அவரது அழகு, நடிப்பு திறன் இன்னும் மாறாமல் இளமையைத் தக்க வைத்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நதியா, சமீபத்தில் ஜிம்மில் கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார், இதன் காரணமாக இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நதியா தனது திரையுலக வாழ்க்கையை மலையாள திரைப்படமான ”நோக்கத்த தூரது கண்ணும் நட்டு” மூலம் தொடங்கி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். பின்னர் தமிழில் பத்மினியோடு இணைந்து ”பூவே பூச்சூடவா” படத்தில் நடித்தார். தொடர்ந்து ”பூக்களைத்தான் பறிக்காதீர்கள்”, ”மந்திர புன்னகை”, ”நிலவே மலரே”, ”அன்புள்ள அப்பா” உள்ளிட்ட படங்களில் தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் நடித்தார்.
1988ஆம் ஆண்டு நதியா சிரிஷ் என்பவரை திருமணம் செய்து, சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பின்னர் சில வருடங்கள் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்த அவர், ஜெயம் ரவிக்காக உருவான ”எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி” போன்ற படங்களில் நடித்தார். மேலும், மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நதியா, அவ்வப்போது குடும்பத்துடன் போட்டோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட ஜிம்மில் வொர்க் அவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள், 58 வயதாக இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள், இளமையின் ரகசியம் இதுதானா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, தமிழ் திரையுலகில் இருந்து விலகிய காரணமாக, நடிகை மீது ஒருவரின் தொடர்ந்த தொல்லை இருந்தது; அதற்காக அவர் வெளிநாடுகளில் நேரம் செலுத்தி சுயாதீனமாக வாழத் தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.