‘பார்க்கிங்’ இயக்குனர் – சிம்பு இணைந்து பணியாற்றும் படத்தின் நிலை என்ன என்பதுதான் திரையுலகின் தற்போதைய பேச்சு. ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது. அதன் பிறகு, படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதன் காரணமாக, அவர் தயாரிக்கும் ‘பராசக்தி’, ‘இதயம் முரளி’ மற்றும் ‘STR 49’ உள்ளிட்ட படங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இது குறித்து கேட்டபோது, வெற்றிமாறன் இயக்கும் படம் இப்போதைக்கு தனது 49-வது படமாக இருக்கும் என்று சிம்பு முடிவு செய்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரனுடன் உள்ள அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பின்னரே, ‘பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமாரின் படத்தின் நிலை என்ன என்பது தெரியும்.
இருப்பினும், சிம்பு உடனடியாக தேதிகளை ஒதுக்க முடியாது. எனவே, ராம்குமார் இயக்கும் படம் சிம்புவின் 51-வது அல்லது 52-வது படமாக இருக்கலாம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்காக வாங்கப்பட்ட அனைத்து நடிகர்களின் தேதிகளும் வீணாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.