நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா, நிச்சயதார்த்தத்துடன் திருமணத்திற்கு தயாராக உள்ள நிலையில், நாகார்ஜுனா சில நிபந்தனைகளை விதித்துள்ளார். சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து வழக்கில் ஏற்பட்ட பரபரப்பு பின்னர், நாகார்ஜுனா இதனைத் தவிர்க்கும் வகையில் சோபிதாவுக்கு சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.
நாகர்ஜுனா மற்றும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கு பிறந்தவர் நாக சைதன்யா. சிறுவயதில் இருந்து தாயாரிடமும் பின்னர் தந்தையிடமும் வளர்ந்தார். நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவி அமலா, நாக சைதன்யாவை தனது சொந்த மகனைப் போல் பாகுபாடின்றி வளர்த்து வந்தார். தந்தையைப் போல் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்ட நாக சைதன்யா, தெலுங்கு ஹீரோவாக அறிமுகமாகி சில வருடங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்த இளம் ஹீரோவாக மாறினார்.
கடந்த 2017-ல், சைதன்யா மற்றும் சமந்தா திருமணம் நடத்தி, மூன்று வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றனர். சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற பின்னர், சைதன்யா சோபிதாவை காதலித்து, விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டார்.
நாகார்ஜுனா, சோபிதாவின் திருமணத்திற்கு முன், சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, சோபிதா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு முன், கணவன் மற்றும் மனைவி இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் நின்று, விவாதிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. சோபிதா இதற்குப் பணிவுடன் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சோபிதா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகுவாரா அல்லது தொடர்ந்து நடிப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .