மும்பை: கங்குலி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருந்த நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா திடீரென விலகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிகிறது. இந்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதற்காக அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.
எனினும் ஆயுஷ்மான் குர்ரானா கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க இருந்த பாத்திரத்தை வங்காள மொழி நடிகரான பிரசென்ஜித் சாட்டர்ஜீ நடிப்பார் என்று தெரிகிறது.
பிரசென்ஜித் சாட்டர்ஜீ இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியின் நெருங்கிய நண்பர் ஆவார். 61 வயதான சாட்டர்ஜி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.