‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தாலும், சமீபத்தில் சென்சார் வாரியத்திடமிருந்து ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. பலர் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும், படக்குழு அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இப்போது அது ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதால், திரையரங்குகள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிவிஆர் மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட பதிவில், “ஏ சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

ஏ சான்றிதழ் படங்களுக்குச் செல்லும்போது வயதுச் சான்று அவசியம்” என்று கூறப்பட்டுள்ளது. இது வசூலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது விரைவில் தெரியவரும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கூலி’.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், அனிருத் இசையமைக்கிறார்கள்.