சென்னை : ஆடுகளம் கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள கலியுகம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சைக்கலாஜிகல் திரில்லராக, பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கலியுகம்.
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் ஆகியோர் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த, திரைப்படம் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.