ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நடிகர்களுக்கான மிக உயரமான கட்-அவுட் இது என்று கூறப்படுகிறது.