நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் சிறந்த நடிகை. இவர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகின.
இன்னொரு நடிகைக்கும் தொடர்பு என்று சொல்லலாம். நிலைமை இப்படியிருக்க புதிய பஞ்சாயத்து தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் “என்ன இது சிம்ரன்” என்று கலங்குகிறார்கள்.
மறுபுறம், இது எப்போது நடந்தது? பணத்துக்காக இப்படிச் செய்வார்கள் என்றும் கருத்துகள் வருகின்றன. மறுபுறம், இதெல்லாம் எப்போவும் நடக்கும் விஷயம் தான். பணத்திற்காக ஏதாவது இப்படி நாடகம் போடுவார்கள் என்ற கமெண்ட்டுகளும் வருகின்றன. கல்யாணத்துக்கு முன்னாடியே பிறந்துட்டேன்.
சமீபத்தில் வைரலான அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த நபர் கூறியதாவது, “என் பெயர் சங்கீத் குமார். ஐஸ்வர்யாராய் 15 வயதாக இருந்த போது நான் பிறந்தேன். லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐஸ்வர்யா ராய் என்னை IVF முறையில் பெற்றெடுத்தார்.
பின் அவரது பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் என்னை வளர்த்தனர். அப்போது, நான் பிறந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் மொத்தமாக அழித்துவிட்டனர், இப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து உண்மை கண்டறிக்கும் விதமாக இந்த விடியோவை நெட்டிசன்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். அப்போது தான், இந்த வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஒன்று என்றும், வீடியோவில் பேசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.