சென்னை: ஒரு நேர்காணலில், “உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவைப் பெறாதபோது அது எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை ஆதரிக்க எனக்கு அதிக நேரம் எடுக்காது. நயன்தாராவின் பதிவைப் பார்த்தவுடனே, அதைப் பகிர வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய கரியரை தானே உருவாக்கி கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் ஒரு பகிரங்கமான கடிதத்தை காரணமில்லாமல் எழுத வாய்ப்பில்லை.
அவர்களைபற்றி நாம் அனைவரும் அறிவோம். தான் சந்தித்த அனுபவங்களை 3 பக்கங்களில் எழுதியுள்ளார். அதனால்தான் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று தோன்றியது. நயன்தாராவை ஆதரிக்கும் அனைவருக்கும் அந்தக் கடிதத்தில் உள்ள பிரச்சனை புரியும். ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் நம்மைப் போன்ற ஒருவரைப் பார்ப்போம். நான் அவளை ஆதரித்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஏனென்றால் நானும் அப்படி ஒரு அனுபவத்தை அனுபவித்திருக்கிறேன்.
பல்வேறு நெருக்கடிகளையும், இன்னல்களையும் சந்தித்து இந்த இடத்தை அடைந்துள்ளார் நயன்தாரா. வாய்ப்பு கிடைத்தால் நயன்தாராவுக்கு ஆதரவாக பேசுவேன். ஆதரவு இல்லாமல் கஷ்டப்படுவது எப்படி என்று எனக்குத் தெரியும். நான் அதை கடந்து வந்திருக்கிறேன். ஆதரவு ஒரு நபரை எப்படி மாற்றும் என்பதையும் நான் அறிவேன். அப்படி சிந்தித்தால், ஆதரவு கிடைக்காதவர்களுக்கு, குறிப்பாக பெண்களாக இருந்தால், நிச்சயம் துணை நிற்பேன்,” என்றார்.
முன்னதாக, நயன்தாரா தனது ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷின் காப்புரிமை நோட்டீஸ் தொடர்பான கடிதம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு முதல் ஆளாக நடிகை பார்வதி ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.