யோகி பாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘சன்னிதானம் பிஓ’. இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, ‘மூணாறு’ ரமேஷ், கஜராஜ், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஜினு அய்யப்பன் கதை, திரைக்கதை எழுதி அமுதா சாரதி இயக்குகிறார்.
சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன், ஷபீர் பதான் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சபரிமலை அய்யப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும் வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களைச் சுற்றியே கதை நகர்கிறது. தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.