May 20, 2024

காலிப்ளவர் பகோடா இப்படி செய்தால் சுவையாக இருக்கும்

காலிஃப்ளவர் பகோடா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஸ்நாக்ஸ். பேக்கரி , ரெஸ்ட்ரண்டுகள் சென்றாலும் இதைத்தான் விரும்பி கேட்பார்கள். காலிஃப்ளவரை விரும்புவோருக்கு கூட அதை இப்படி வறுத்து சாப்பிடத்தான் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் நினைத்த போதெல்லாம் காலிஃப்ளவர் பக்கோடா செய்து சாப்பிட ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1/2 கிலோ

மஞ்சள் – 1/2 டீஸ்பூன்

ஊற வைக்க

கடலை மாவு – 1 1/2 டீஸ்பூன்

மைதா – 1 1/2 டீஸ்பூன்

சோள மாவு – 1 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – சிறிதளவு

உப்பு – தே.அ

செய்முறை:

காலிப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க மசாலா கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பின் வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டிவிட்டு கலந்துகொள்ளுங்கள். காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்கியிருக்க வேண்டும்.

பின் 10 நிமிடங்கள் ஊற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் காலிஃப்ளவர் பக்கோட ரெசிபி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!