சென்னை: ருசி பிரமாதம்… பிரமாதமான ருசின்னு குடும்பத்தினர் பாராட்டுக்களை பெறணுமா? அப்ோ கடலைப்பருப்பு குருமா இப்படி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 1/4 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்துமல்லித்தழை – சிறிதளவு
பட்டை – 2
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கசகசா – 1/4 தேக்கரண்டி
லவங்கம் – 5
மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பை கழுவி சீரகம், மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு முக்கால் பதத்திற்கு குழைந்து விடாமல் தண்ணீரில் வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்க்கவும். பிறகு வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்று இரண்டாக லேசாக மசித்து, இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பாத்திரம் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.