தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப்
பச்சை அரிசி மாவு – 2 தேக்கரண்டி
வெல்லம் – 1 கப் (துருவியது)
நெய் – ¼ கப்
முந்திரி – 10
உலர்ந்த திராட்சை – 10
ஏலக்காய் தூள் – 3
துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை: பாசிப்பருப்பை வெற்று வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும், பின்னர் அதை மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் கொதிக்க வைக்கவும். (பாசிப்பருப்பு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்). வேகா வைத்த பருப்பை நன்றாக மசிக்கவும். நன்கு கொதித்ததும் பச்சை அரிசி மாவை தண்ணீரில் கரைத்து வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி, வேகவைத்த பருப்பில் ஊற்றவும். பருப்புடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுத்து, பருப்பு கலவையில் ஊற்றவும். துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.