தேவையான பொருட்கள் :
3 உருளைக்கிழங்கு, வேகவைத்து மசித்தது
3 பிரட் துண்டுகள்
1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
2 டீஸ்பூன் எண்ணெய்
1 அங்குல இஞ்சி, நறுக்கியது
2 பச்சை மிளகாய், நறுக்கியது
1 வெங்காயம், நறுக்கியது
¼ கப் கடலைப் பருப்பு, வேகவைத்தது
1 கரம் மசாலா
1 டீஸ்பூன் சீரகம்
உப்பு, சுவைக்க
ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
செய்முறை :
இந்த டிக்கிகளை செய்ய, ஒரு பாத்திரத்தில், பிரட் துண்டுகளின் ஓரங்களை ட்ரிம் செய்து , சிறிது தண்ணீர் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்போது, மசித்த உருளைக்கிழங்கை கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெயை மிதமான தீயில் வைத்து சூடாக்கவும். நறுக்கிய இஞ்சி, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் கொஞ்சம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அடுத்து, கடலைப் பருப்பு, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். இதை சுமார் 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைக்கவும். கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கி இறக்கிவைத்துக்கொள்ளவும். தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பிரட் கலவையை சம அளவு கொண்ட பாகங்களாக பிரித்து அதைத் தட்டி ஒவ்வொன்றின் உள்ளேயும் கடலை பருப்பு கலவையை கொஞ்சம் நிரப்பி உருட்டி டிக்கிகளாக தட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, டிக்கிகளை மெதுவாக உள்ளே போட்டு மிதமான தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாக மாறும் வரை சமைக்கவும். இதை புதினா சட்னி அல்லது கெச்சப் வைத்து பரிமாறினால் மாலை பசி தீரும்.