சென்னை: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இன்று ஆப்பிள் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 2,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பால் – ஒரு டம்ளர்
செய்முறை: ஆப்பிளை பொடியாக நறுக்கிகொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருக்கியதும், பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.
ஆப்பிள் நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.
பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம். சத்தான சுவையான ஆப்பிள் சூப் ரெடி.