தேவையானவை :
நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 2,
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – ¼ கப்,
பச்சை மிளகாய், இஞ்சி – சிறிதளவு (நறுக்கியது),
தோசை மாவு – 2 கப்,
நெய் (அ) எண்ணெய் – 100 கிராம்.
செய்முறை:
நறுக்கிய கொட்டைகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வேகவைத்த வாழைத்தண்டு ஆகியவற்றை நன்கு கலக்கவும். தோசை தவாவில் ஒரு ஸ்பூன் மாவு விட்டு கலந்து வைத்துள்ள வாழைத்தண்டு கலவையை மேலே தாராளமாக தூவி, மேலே சிறிது இட்லி மிளகாய் தூவி நெய் (அ) எண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்து சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.