உடல் சூட்டை தணிக்கக்கூடியது ஆட்டுக்கறி, தோலுக்கு வலிமை தருகிறது.. கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது.. மட்டனில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், மட்டனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மட்டனின் பாகங்களும் உடலுக்கு
ஆட்டின் குடல் கறியை, “போட்டி” என்று சொல்வார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போட்டியை சமைத்து சாப்பிடலாம்.. ஆட்டு குடலில், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E, K போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன..
புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின் B12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாக இந்த போட்டி உள்ளது.. எனவே, மியூசின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடல் தொடர்பான கோளாறுகளை போக்குவதற்கு இந்த ஆட்டுககுடல் உதவுகிறது. குடல்கறியில் துத்தநாகம் உள்ளதால், இதை சமைத்து சாப்பிடும்போது, நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமும் பராமரிக்கப்படுகிறது..
இந்த குடலில் கறியானது, கோலினின் நல்ல மூலமாகும்.. இது மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை பராமரிக்க முக்கியமான ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஆட்டின் குடல்களில் கிரியேட்டின் நிறைந்துள்ளதால், இது தசை செயல்திறனை மேம்படுத்துவதற்கு பேருதவி புரிகிறது.
ஆட்டுக்கறியின் குடல் உட்பட மற்ற பாகங்களில் எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. காரணம், சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.. சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்பதால், மட்டன் சாப்பிடும்போது மட்டும் அளவில் கவனம் தேவை என்கிறார்கள்.