தேவையான பொருட்கள்:
ரொட்டி – 10 துண்டுகள்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன் போட…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1
உப்பு – ருசிக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு.
முட்டை – 2
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – ருசிக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது
செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து கிளாஸ் ஆகும் வரை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து சிறு தீயில் வைத்து 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சாஸ் சேர்த்து 1 நிமிடம் கிளறி தனியாக வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஒரு ரொட்டியை எடுத்து வட்ட வடிவிலோ அல்லது விரும்பிய வடிவிலோ வெட்டிக் கொள்ளவும். பின் ஒரு ரொட்டியை எடுத்து அதன் நடுவில் வெங்காய கலவையை பரப்பவும். பிறகு அதன் மேல் மற்றொரு ரொட்டியை வைத்து கைகளால் நன்றாக அழுத்தவும். இதேபோல் மற்ற ரொட்டி துண்டுகளையும் செய்து ஒரு தட்டில் வைக்கவும். பிறகு ஒரு தட்டையான கடாயை அடுப்பில் வைத்து 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஸ்டப் செய்த பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, முட்டைக் கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தால், சுவையான பிரட் ஆனியன் ஸ்டப்ட் மசாலா ரெடி.