தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 500 கிராம்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 4-5
கறிவேப்பிலை – 1 கட்டு
உப்பு – ருசிக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாகற்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதில் பூண்டு பற்களை அரைத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதில் ஊறவைத்த பாகற்காய் வடிகட்டி 5 நிமிடம் நன்கு வதக்கவும். பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேகவிடவும். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, சாம்பார் தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி இறக்கினால் சுவையான பாகற்காய் சுக்கா தயார்.