தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 2
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 பெரியது
புளி – நெல்லிக்காய் அளவு
குழம்பு மிளகாய் தூள் – 2 tbsp
கருப்பு சுண்டல் – 2 tbsp
உப்பு – தே. அ
தாளிக்க :
எண்ணெய் – 3 tsp
கடுகு – 1 tsp
வெந்தையம் – 1/4 tsp
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயத்துள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை :
பாகற்காயை கொட்டை நீக்கி வட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். சுண்டலை கிண்ணத்தில் வேக வைத்துக்கொள்ளுங்கள்.புளி ஊற வைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.
ல்கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தையம் ,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். அதோடு கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் சேருங்கள். தற்போது சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக பாகற்காய் சேர்த்து வதக்கி உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும். தற்போது புளித்தண்ணீர் ஊற்றவும். கொதித்து வரும்போது வேக வைத்த சுண்டலை சேர்க்கவும். மிளகாய் தூள் வாசனை போக 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான பாகற்காய் புளிக் குழம்பு தயார்.