தேவையான பொருட்கள்
50 கிராம் துவரம் பருப்பு
மூன்று தக்காளி
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி
ஒரு ஸ்பூன் சீரகம்
அரை ஸ்பூன் மிளகு
10 பல் பூண்டு
ஒரு டீஸ்பூன் கடுகு
ஒரு சிவப்பு மிளகாய்
கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள்
தாளிக்க தேவையான அளவு எண்ணெய்

செய்முறை
ரசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து பருப்பை வேகவைக்கலாம். தக்காளி மற்றும் புளியை வேகவைத்து நன்றாக வைக்கவும். மிக்ஸி ஜாடியில் சீரகம், மிளகு மற்றும் பூண்டை அரைத்து அதில் பருப்பை சேர்க்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். தாளித்த பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றி, பின்னர் கொத்தமல்லி இலைகளைத் தூவவும். மிகவும் சுவையான செட்டிநாடு பருப்பு ரசம் ரெடி.