சென்னை: சௌசௌ காய் உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதை சட்னியாக செய்து கூட சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
சௌ சௌ – 1
சின்ன வெங்காயம் – 20
பொட்டு கடலை – 1/4 கப்
கறிவேப்பில்லை – 1
வர மிளகாய் – 3
துருவிய தேங்காய் – 3
மேஜைக்கரண்டி புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
செய்முறை: சௌ சௌவை தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். டாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், சௌ சௌ, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
சௌ சௌ நன்றாக வதங்கியதும் பொட்டுக்கடலை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிடவும். இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் புளி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். வதக்கியவற்றை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு, உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்தால் சுவையான சௌசௌ சட்னி தயார். இதனை தோசை, இட்லியுடன் பரிமாறவும்.