தேவையான பொருள்கள் :
நண்டு , தக்காளி ,பெரிய வெங்காயம் , இஞ்சி ,மிளகு, சீரகம் , எண்ணெய், பூண்டு ,பச்சைமிளகாய் , பட்டை ,பிரியாணி இலை ,கொத்தமல்லி இலை , உப்பு
செய்முறை:
முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும். உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும். தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும். நண்டு நன்கு வெந்ததும் இப்பொழுது மிளகு, சீரகத்தூள் போடவும். நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும். இதோ சுவையான நண்டு சூப் தயார்.