தேவையானவை:
வாழைக்காய் – 2
உளுத்தம் மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை வேகவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை அச்சில் போட்டு பிழிந்து சிவந்ததும் எடுக்கவும்.
கரகரப்பான வாழைக்காய் தேன்குழல் ரெடி…