தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்
ஓமம், மஞ்சள் தூள் – தலா ½ தேக்கரண்டி
தண்ணீர், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, ஓமம், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்யவும். சிறிது நேரம் ஊறிய பின் சப்பாத்தி போல் செய்து சதுரமாக நறுக்கி ரோல் மாதிரி சுற்றி வைக்கவும். சதுரங்களின் இரண்டு எதிர் முனைகளை மட்டும் அழுத்தி ரோல் போல உருட்டவும். இதையெல்லாம் செய்த பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெந்த பிறகு பொரித்த சூடான கறிவேப்பிலை, ஆம்சூர் தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள் தூவவும்.