தேவையான பொருட்கள்:
வெள்ளரிகாய் – 1
தக்காளி – 2
பூண்டு – 4
துவரம் பருப்பு – 100 கிராம்
வெங்காயம் – 1
மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிது
பெருங்காயம் தூள் – 1 சிட்டிகை
புளி – சிறிது
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும். பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து 3-4 விசில் விட்டு வேக விடவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பின் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாக வதக்கவும். பிறகு வெள்ளரித் துண்டுகளைச் சேர்த்து சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி மூடி, மிதமான தீயில் வேக வைக்கவும். வெள்ளரிக்காய் வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, வெண்ணெய் சேர்த்துக் கிளறி, சிறிது புளிச் சாறு சேர்க்கவும். சேர்த்து கொதிக்க விடவும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சூப்பர் பருப்பு வெள்ளரிக்காய் குழம்பு தயார்!