தேவையானவை:
மண் சட்டி – 1
பரோட்டா – 3
சில்லி சிக்கன் – 100 கிராம்
சிந்தாமணி கோழி – ஒரு தட்டு
பாதாம் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிது
சிக்கன் கிரேவி – தேவைக்கேற்ப
வேகவைத்த முட்டை – 2
வாழை இலை – வட்டமாக நறுக்கியது 2
செய்முறை:
நறுக்கிய வாழை இலையை மண் சட்டியில் வைத்து அதில் பரோட்டாவை வைக்கவும். அதன் மேல் சில்லி சிக்கனைப் பரப்பி, சிறிது கொத்தமல்லி தழை தூவி ஸ்பெஷல் கிரேவியை ஊற்றவும். அதன் மீது மற்றொரு பராட்டாவை வைத்து சிந்தாமணி சிக்கனை வைக்கவும். பிறகு மீண்டும் குழம்பு ஊற்றி கொத்தமல்லி தழை தூவி மற்றொரு பரோட்டா வைக்கவும். கடைசியாக ஒதுக்கிய பாதாம் பருப்பை தூவி வேக வைத்த முட்டையை 4 ஆக நறுக்கி மேலே போட்டு மீண்டும் குழம்பு ஊற்றி வாழை இலையில் மூடி மண் பானையுடன் அடுப்பில் வைத்து இறக்கினால் 2 நிமிடத்தில் பரோட்டா ரெடி.