தேவையான பொருட்கள் :
அல்போன்சா மாம்பழம் – 5.
ஸ்வீட் விப்பிங் கிரீம் – 400 மி.லி.
பால் – 500 மி.லி.
குங்குமப்பூ – 1 சிட்டிகை.
சர்க்கரை – 1 கப்.
செய்முறை :
முதலில், ஒரு கடாயில் பால் ஊற்றி அதில் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 15 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இப்போது, மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம் மற்றும் தயார் செய்து வைத்த கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
இதையடுத்து, அதில் ஸ்வீட் விப்பிங் கிரீமை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
பிறகு, அவற்றை பாத்திரத்தில் ஊற்றி 12 மணிநேரம் பிரீஸரில் வைத்து எடுத்தால் அட்டகாசமான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்.