தேவையான பொருட்கள்:
1 மாங்காய்
200 கிராம் வெல்லம்
2 தேக்கரண்டி வேப்பப் பூ
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய்
1 தேக்கரண்டி எண்ணெய்
1 தேக்கரண்டி துருவிய தேங்காய்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தோலை உரித்து மாங்காயை பொடியாக நறுக்கவும். மாங்காய் நன்றாக வெந்ததும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ போட்டு வதக்கி, வதக்கிய மாங்காய் கலவையில் சேர்த்து, பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். சுவையான மாங்காய் வேப்பம்பூ பச்சடி தயார்.