தேவையான பொருட்கள்
50 கிராம் வெங்காயம்
200 கிராம் கொத்தவரங்காய்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/4 கப் துருவிய தேங்காய்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
எண்ணெய்
உப்பு சுவைக்கேற்ப
உளுந்து பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை: கொத்தவரங்கையை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். சூடான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து மூடி போட்டு வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் போதும். இப்போது துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து உப்பு சரி பார்க்கவும். சுவையான சத்தான கொத்தவரங்காய் பொரியல் தயார்.