சென்னை: சுவை மற்றும் சத்து நிறைந்த ஒரு புதுவகையான ஓட்ஸ் காரபாத் ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் 3 கப்
மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கேரட் 1 கப்
பச்சை மிளகாய் 1
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை
கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு தாளிக்க.
பெருங்காயத்தூள் 1/4 தேக்கரண்டி
மச்சள் தூள் 1/4 தேக்கரண்டி
உப்பு
செய்முறை: ஓட்ஸை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தாளிப்பிற்கு தேவையானவற்றை அதில் சேர்க்கவும். கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சாம்பார் பொடி மற்றும் பச்சை மிளகாயை அதில் சேர்த்து கலக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் இதர காய்களை அதில் சேர்த்து மச்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும். இதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் ஓட்ஸை இதில் சேர்த்து கலக்கவும். மிதமான சூட்டில் இதை கிளறவும். கடாயை மூடியால் மூடி, வேக வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அனைத்து நன்றாக கிளறவும். வறுத்த முந்திரி, கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரிக்கவும். வெங்காய பச்சடியுடன் இதைப் பரிமாறவும்.